கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவையொட்டி மூலவர் ராமநாதீஸ்வரர், நந்தித் தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் பிரதோஷ மூர்த்தி சுவாமிகள் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன், அர்ச்சகர் பாலகிருஷ்ணன், ஓதுவார்கள் பழனியாண்டி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.