வேலூர்:வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நன்மைக்காக, 10ம் ஆண்டு தன்வந்திரி மூலவருக்கு தைலாபிஷேகம், 12ம் ஆண்டு மந்திரபிரதிஷ்டை விழா, நேற்று நடந்தது.தொடர்ந்து, மகா லட்சுமி யாகம், சூக்த யாகம், தாமரை மலர்களுடன், 11 ஆயிரம் வில்வ பழங்களைக் கொண்டு சிறப்பு யாகத்தை, முரளிதர ஸ்வாமிகள் நடத்தினார்.