பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
ராசிபுரம் : ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், வரும், 16ம் தேதி, சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. வரும், 16ம் தேதி, பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் துலாம் ராசியில் இருந்து, விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ச்சியாகிறார். இதையடுத்து, ராசிபுரம் கைலாசநாதர் கோவில் நவகிரக பக்தர்கள் குழு சார்பில், சனி பகாவன் சன்னதியில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் உத்தமபலன், மிதுனம், கடகம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மத்தியபலன், மேஷம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள், பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.சனீஸ்வரனால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள், அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.