பதிவு செய்த நாள்
08
டிச
2014
12:12
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதர் கோயிலில்,சிவனடியார்கள் சார்பில் சனி பெயர்ச்சி முன்னிட்டு அதிருத்ரயாகம் நடந்தது. ருத்ரயாகம்:ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் நடக்கும் அதிருத்ரயாகத்தில் சனி பெயர்ச்சியினால் தனுசு,விருச்சிகம்,துலாம்,மேஷம்,ரிஷிபம்,சிம்மம், ஆகிய ராசிகளுக்கு பாதிப்பு ஏற்படும். நமது முன்னோர்கள் செய்த மகாபாதங்களால், நமக்கு ஏற்படும் குறைபாடுகளை போக்கவும், மன அமைதி பெறவும் இந்த ருத்ர யாகம் நடத்தப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் முதன் முறையாக நடத்தப்படும் யாகத்தில் 121 வேத விற்பன்னர்கள் 11 முறை யாக குண்டத்தின் முன்பு அமர்ந்து பராயணம் செய்வார்கள். இதில் 14,641 ஆவர்த்திகள் செய்யப்படும். இந்த யாகத்தினை திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் தலைமையில் நேற்று முன் தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. டிச.12 இரவு 11.52 மணிக்கு சனி பெயர்ச்சி நடக்கும் வரை யாகம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. உலக அமைதி: இந்தயாகத்தில் பூர்ணாகுதியின் போது 104 வகையான திரவியங்கள் படைக்கபடும். அப்போது இறைவன் மனது குளிர்ந்த நிலையில் இருப்பார். பக்தர்கள் வேண்டம் வரங்களை அருளுவார். அதிருத்ர யாகம் மூலம் உலக அமைதி பெறவும், மனித சமுதாயம் நிம்மதியாக வாழ்வதற்காகவும் இந்த யாகம் நடத்தப்படுவதாக சிவனடியார்கள் தெரிவித்தனர்.