திருப்போரூர்: செம்பாக்கம் பைரவர் கோவிலில், பைரவர் அஷ்டமி லட்சார்ச்சனை விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர் அடுத்துள்ள செம்பாக்கத்தில், பழமையான கால பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பைரவர் அஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது.அந்த வகையில், இந் தாண்டு பைரவர் அஷ்டமி லட்சார்ச்சனை மற்றும் யாக சாலை புஜை, கடந்த 12ம் தேதி தொடங்கியது. பிரதான விழாவான நேற்று, மகா அபிஷேகமும் தீபதுாப ஆராதனையும் நடந்தன. செம்பாக்கம் மட்டுமின்றி திருப்போரூரை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.