அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் ஐயப்பன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. கோயில் நிர்வாகி சீனிவாசன் தலைமை வகித்தார். யாகசாலை பூஜை, சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அலங்காநல்லுார் தெப்பக்குளத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலிலும் இவ்விழா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜைகள் முடிந்து அபிஷேகங்கள் நடந்தன. சோழவந்தான் : வைகை கரை சனீஸ்வர பகவான் கோயிலில் பரிகாரபூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராஜேந்திரகுமார், ஊழியர் பூபதி செய்திருந்தனர்.