ஆனைமலை : கோட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காமாட்சியம்மன் கோவில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
கோட்டூரில் கமல காமாட்சியம்மன் கோவில், ஆனைமலையில் உள்ள காமாட்சியம்மன் கோவில்களில் நேற்று மதியம் 12.10 மணிக்கு திருவிளக்கு வழிப்பாட்டுடன் சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் துவங்கியது. மதியம் 2.44 மணிக்கு சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிகழ்வு நடந்தது. இதையடுத்து மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மஹா மிருத்யுஞ்சய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஆகியனை நடைப்பெற்றது. பின்னர் சனி பகவானுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை செய்து வழிபாடு நடைப்பெற்றது. இதையடுத்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.