பதிவு செய்த நாள்
18
டிச
2014
01:12
வால்பாறை : வால்பாறை ஐயப்பசுவாமி கோவில் மண்டல பூஜைத்திருவிழா நேற்று
கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, ஐயப்பசுவாமி கோவில் 29ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழாவையொட்டி நேற்று காலை 5.00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6.00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், 7.00 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தன. திருக்கொடியை அகிலபாரத ஐயப்பசேவா சங்கத்தலைவர் மூர்த்தி தலைமையில், குருசாமி சுப்புராஜ் ஏற்றினார். அதன் பின் ஐயப்பனுக்கு பல்வேறு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன. வரும் 20ம் தேதி அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது. மாலை 3.00 மணிக்கு பாலகொம்பு எடுத்துவரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 21 ம் தேதி ஐயப்பசுவாமி அலங்காரத்தேரில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்பசேவா சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே சாலரப்பட்டியில், ஐயப்ப பக்தர்கள் சார்பாக ஐந்தாம்ஆண்டு மண்டலபூஜை, திருவீதிஉலா, அன்னதானம் நடந்தது. அங்கு, ஐந்தாம் ஆண்டு மண்டலபூஜையையொட்டி, நேற்றுமுன்தினம், ஐயப்பனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் மற்றும் விநாயகர், சின்னான்டவர், கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அன்னதானமும், மாலையில் ஐயப்பசாமி திருவீதி உலாவும் இடம்பெற்றன. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.