பொள்ளாச்சி : பொள்ளாச்சி குமரன் நகர் விநாயகர், கன்னிமுத்து மாரியம்மன், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கருப்பராயன் கோவில்களில் கடந்த ஐப்பசி மாதம் கும்பாபிேஷகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வந்தது. அதன் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. அதற்காக இன்று காலை 5.00 மணிக்கு கணபதி ேஹாமம், அபிேஷகம், தீபாராதனை நடைபெறுகிறது. இத்தகவலை விழாக்குழுவினர் தெரிவித்தனர்.