பதிவு செய்த நாள்
18
டிச
2014
02:12
திருப்பூர் : திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா, 2015, பிப்., 25ல், கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.26ல் கொடியேற்றம், 27ல் சூரிய, சந்திர மண்டல காட்சி, 28ல் பூத வாகனம், சிம்ம வாகன காட்சிகள் நடக்கின்றன. மார்ச் 1ல் புஷ்ப விமானத்திலும், 2ல் பஞ்ச மூர்த்திகளுடனும், ரிஷப வாகனத்திலும் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 3ல், திருக்கல்யாணம், யானை மற்றும் அன்ன வாகன
காட்சி நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை, திருமுருகநாத சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும்
நிகழ்ச்சியும், மாலை 3:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதேபோல், 5ம் தேதி மாலை 3.00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடைபெறும். 6ல் பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சி; 7ல் சுந்தரர் வேடுபறி திருவிழா; 8ல் பிரம்மதாண்டவ தரிசன காட்சி; 9ல் மஞ்சள் நீராட்டு, மயில் வாகன காட்சி நடக்கிறது.