தஞ்சாவூர்: தஞ்சையில், சங்கர பக்த சபா சார்பில், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 22வது ஆராதனை விழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். துவக்க நிகழ்ச்சியாக கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் சுதர்ஸன ஹோமம், ஆவஹந்தி ஹோமம், பிதுர்சாப நிவர்த்தி உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு நவாவரண பூஜை, தம்பதி பூஜை, வடுக பூஜை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆராதனை செய்தனர்.