பதிவு செய்த நாள்
19
டிச
2014
01:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள உண்டியல்கள், நேற்று திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதில், பக்தர்கள் காணிக்கையாக, 28,67 லட்சம் ரூபாய் செலுத்தியிருந்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு, நாள்தோறும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள உண்டியல், மாதம் ஒரு முறை திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்படும். நேற்று காலை, கோவில் இணை ஆணையர் ஜெயராமன், முன்னிலையில் உண்டியல்கள் திறந்து, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 28 லட்சத்து, 67 ஆயிரத்து, 613 ரூபாய் ரொக்கமாகவும், 93 கிராம் தங்கம், 702 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.