பதிவு செய்த நாள்
25
டிச
2014
12:12
அன்னுார் : மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மேற்றலை தஞ்சாவூர் என்றழைக்கப்படும் அன்னுார் மன்னீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில், இன்று கிராம தேவதை வழிபாடு நடக்கிறது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி வேள்வி நடக்கிறது. காலை 7:00 மணிக்கு திருக்கொடியேற்றம் நடக்கிறது. 31ம் தேதி, காலையில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.ஜன.,1ம் தேதி காலை, 7:30 மணிக்கு, சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளைய பட்டம் மருதாசல அடிகள், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி உள்ளிட்ட மடாதிபதிகள் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.