குன்னூர்: குன்னூர் ஐயப்பன் கோவிலில் நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. குன்னூர் ஐயப்ப பக்தர் சங்கம் சார்பில், ஐயப்பன் கோவிலில், 48வது ஆண்டு மண்டல பூஜை நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னதானம், பஜனை, ராக்கால பூஜை நடந்தன. மவுன்ட்ரோடு டாக்சி ஸ்டாண்ட் அருகே நகராட்சி சார்பில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 10:15 மணிக்கு துர்கையம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம்,சிறப்பு அபிஷேகம், மாலை, 4:35 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை அணிவகுப்புடன் பாலக்கொம்பு ரதத்தில் ஐயப்பன் திருவீதி உலா, மாலை 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலி ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை ஐயப்பன் பக்தர் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.