பதிவு செய்த நாள்
26
டிச
2014
02:12
ஈரோடு:ஈரோட்டில், அகில விஷ்வ காயத்ரி பரிவார் சார்பில், அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும், 108 குண்டம் வளர்த்து, காயத்ரி மஹா யாக பூஜை நாளை (27ம் தேதி) முதல், 29ம் தேதி வரை நடக்கிறது.முன்னதாக, நாளை அதிகாலை, நான்கு மணிக்கு தீர்த்த குடம் ஊர்வலம், மாலை கலச பூஜையும், 28ம் தேதி காலை, 10.30 மணிக்கு யாகபூஜை துவக்கமும், மகாதீபாராதனை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாலை, ஏழு மணிக்கு பிரமாண்ட விளக்கு பூஜையும் நடக்கிறது. இதுபற்றி, ஒருங்கிணைப்பாளர் கரம்சி பட்டேல் கூறியதாவது:பொதுவாக, பிராமணர்கள் தான், மந்திரங்களை கூறி யாகம் வளர்ப்பர். உலக நன்மைக்காகவும், மூட நம்பிக்கைகளை விரட்டுவதற்காகவும், ஒவ்வொரு குண்டத்திலும், மூன்று தம்பதிகள் சமேதராய் அமர்ந்து, மேடையில் அய்யர் மந்திரம் சொல்ல, சொல்ல யாகம் வளர்ப்பர். காயத்ரி மந்திரம் ஓதுவதால், நல்லறிவும், நல்லெண்ணங்களும் ஏற்படும். இதற்காக, 108 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தீர்த்தக்குடம் ஊர்வலமாக, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் புறப்பட்டு, மணிக்கூண்டு, சத்தி ரோடு வழியாக, வ.உ.சி., பூங்காவை அடையும். அங்கு யாகத்தில் அமர மற்றும் சக்தி கலச பூஜை செய்ய, 98434-24025, 94433-66475 என்ற தொலைபேசி எண்களில், முன்பதிவு செய்து, அனைவரும் பங்கேற்று இறையருள் பெறலாம், என்றார்.