பதிவு செய்த நாள்
29
டிச
2014
01:12
கரூர்: கரூரில் நகரத்தார் சங்கம் சார்பில், பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதில்,
மங்களப்பொருட்கள், 1.25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
சிங்கப்பூர், மலேசியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் நகரத்தார் சார்பில், ஆண்டுதோறும் திருவண்ணாமலை தீபத்திருநாள் முதல், 21 நாள் பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படும். நேற்றுமுன்தினம் சஷ்டி, சதயம் இணையும் நாளில் கரூர் ராணி சிதை கம்யூனிட்டி ஹாலில் விரதம் முடித்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் அகவல் பாடி, மாவிளக்கு அல்லது திரட்டுப்பாலில், 21 நூல் திரி ஏற்றி வழிபாடு நடந்தது. இவ்விழாவில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 600 பேர் பங்கேற்றனர். இவர்கள், ஒரு கிலோ உப்பை, 25 ஆயிரம் ரூபாய்க்கும், 10 எலுமிச்சைப்பழம், 7,000 ரூபாய்க்கும் குங்குமம், 9,000 ரூபாய்க்கும் என, 18 வகையான மங்கள பொருட்கள் 1.25 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. நிகழ்ச்சியில் நகரத்தார் சங்கத் தலைவர் செந்தில்நாதன், செயலாளர் பழனியப்பன், பொருளாளர் குமரவேல் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.