Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 65/100 தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) 65/100 கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) 60/100 கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 75/100
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:48

கோடி கோடிஇன்பம் பெறவே தேடி வரும் செல்வம்!

செவ்வாயின் உச்ச வீடாகத் திகழும்மகர ராசி அன்பர்களே!

கடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு 10ம் இடத்தில் இருந்து உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கி இருப்பார். அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும், குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு நன்மைகள் அதிகம் நடக்கும். குரு பகவான் 7ம் இடத்தில் இருக்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சிகளை உருவாக்குவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள்கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். அதோடு குருபகவானின் 5-ம் இடத்துப் பார்வையும் நன்மை தரும்.சனிபகவான் இப்போது 11-ம் இடத்தில் இருக்கின்றார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும்,அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.நிழல் கிரகமான ராகு தற்போது 9-ம் இடத்தில் உள்ளார். அங்கு அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம்.பொதுவாகவே ராசிபலன் வாசிப்பவர்கள், எனக்கு சனிப்பெயர்ச்சி பலன் நன்றாகத் தானே இருந்தது. திடீரென இடையில் சிரமம் வருகிறதே! இது எதனால் வந்தது என குழம்பிப் போகிறார்கள். இதற்கு காரணம், வேறு ஏதாவது ஒரு கிரகத்தின் சஞ்சார நிலையே. மாதம் ஒருமுறை ராசி விட்டு ராசி மாறும் சூரியனும், ஒன்றரை மாதத்திற்கு ஒரு முறை மாறும் செவ்வாயும், ஏன்..குறைந்த பட்சமாக இரண்டரை நாட்களுக்குள்ளேயே மாறி விடும் சந்திரனும் கூட, அவர்கள் தங்கும் அந்த குறைந்த பட்ச காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம்.கடவுள் நம்மை சிறந்த பாதையில் வழிநடத்தவே இவ்வாறு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட கிரகம், நமக்கு நன்மை தரும் என்றாலும், அந்தப் பெயர்ச்சி காலத்திற்குள்ளேயே அது வக்ரமாகி விட்டால், நன்மையோ சிரமங்களோ தரலாம். நடப்பதöல்லாம் நல்லதாக இருக்கிறதே! இதனால், நாம் இஷ்டத்துக்கு ஆட்டம் போடலாமே என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடவுள் ஒரு கிரகத்தின் சஞ்சாரத்தை மாற்றுவதன் மூலம் ஒரு கடிவாளத்தைப் போட்டு விடுவார். இவ்வகையில், மகர ராசியினருக்கு ராகுவின் மூலம் ஒரு வேகத்தடை போட்டு வைத்திருக்கிறார். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 3-ம் இடத்தில் உள்ளார். அவர் இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார்.மேற்கண்ட கிரக நிலையில் இருந்து ஒட்டுமொத்த பலனைக் காணலாம்.பொருளாதார வளம் மேம்படும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு செலவுகள் அதிகரிக்கும். குருபகவான் 6-7-2015ல் சிம்மத்திற்கு மாறுகிறார். அவர் சாதகமற்ற இடத்துக்கு சென்றுவிட்டாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.அந்த பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.குடும்பம்வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். தொடக்கத்தில் உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். அவர்களிடம் சற்று ஒதுங்கி இருக்கவும். மே,ஜூன் மாதங்களில் சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளியூருக்கு மாற்ற வேண்டி இருக்கும்.இதனால் பெரும் சிரமம் வருமோ என்று அஞ்ச வேண்டாம். காரணம், இந்த வெளியூர் பயணம் உங்களுக்கு சகல வளத்தையும் தரும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் உங்கள் குழந்தைகளின் திருமணம், கல்வி விஷயங்களுக்கு பெருமளவு பயன்படுவதாய் இருக்கும். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.

தொழில், வியாபாரம்வருமானம் அதிகரிக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை வந்தாலும் உடலை வருத்தி வளர்ச்சி காண்பீர்கள். எந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அறிவைப் பயன்படுத்தி வருமானத்தை காணலாம். ஜூன் மாதத்திற்கு பிறகு குரு நிலையற்ற தன்மையைக் கொடுப்பார். லாபத்தில் குறைவு ஏற்படலாம். போட்டி அதிகமாக வாய்ப்புள்ளது.பணியாளர்கள் திருப்திகரமான நிலை இருக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பக்கத் தொழில் செய்பவர்களுக்கு, வருவாய் அதிகரிக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம், பதவி மாற்றம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அக்டோபர் மாதம் வேலையில் சற்று பின்தங்கிய நிலை ஏற்படலாம்.வேலையில் சிலருக்கு பங்கம் வரலாம். சிலர் கூடுதல் பொறுப்புகளை இழந்து வருமான இழப்புக்கு ஆளாகலாம். எனவே, அக்டோபரில் வேலையில் கவனமாக இருக்கவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக பெண் ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருள் சேரும்.

கலைஞர்கள்நல்ல புகழையும், பாராட்டையும் பெறலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். பணச்செழிப்பிலும் எந்த குறையும் இருக்காது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் பலன்கள் குறையும். எதையும் சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். எதிரிகளால் தொல்லைகள் இருக்கும்.
 
மாணவர்கள்ஆண்டின் முற்பகுதியில் கல்வியில் சிறப்பு அடைவீர்கள். நல்ல மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லுõரியில், விரும்பிய பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் உண்டு.

விவசாயிகள் மகசூல் அதிகரிக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் புதிய சொத்து வாங்கலாம். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள்நல்ல பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகையால் செலவு கூடும். குடும்பம் உங்களால் சிறப்படையும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மார்ச், ஏப்ரல் மாதங்களில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பர். தொழில் செய்யும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். ஜூன் மாதத்திற்கு பிறகு சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாகலாம்.

பரிகாரப் பாடல்: நாற்கரத்து நாயகியாள்நாற்றிசையின் நல்வினையாள்கார்மேகம் போல் தனத்தைக்காத்திடவே பெய்திடுவாள்நுõற்புலவர் தம்முகத்தாள்நுõதனத்தின் ஒரு வடிவாள்பாற்பணியும் ஐஸ்வரியபரவையாளே போற்றியம்மா!

பரிகாரம்: நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். லட்சுமி தாயாரை வணங்கி வாருங்கள். ஜூன் மாதத்திற்கு பிறகு குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். இதன்மூலம் தடையின்றி முன்னேறலாம். சனியன்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றுங்கள்.  பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வலம் வந்து வணங்குங்கள்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »
temple
பொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்
 
temple
நல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே! புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்
 
temple
மதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்
 
temple
உழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களே!சனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்
 
temple
மன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே!இந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.