பதிவு செய்த நாள்
03
ஜன
2015
12:01
திருவாரூர்: திருவாரூர், தியாகராஜர் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவில்களில், நாளை மறுநாள் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. இதையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. விளமல், பதஞ்சலி மனோகரர் கோவில் விழாவில் நாளை இரவு 8:00 மணிக்கு, நடராஜர் மற்றும் பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்களுக்கு, திருச்சபையில் அபிஷேகம் நடக்கிறது. வரும் 5ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு, லிங்கத்தில் எழுந்தருளி நடராஜ பெருமான், பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளுவார். தியாகராஜர் கோவிலில், நாளை இரவு 7:00 மணிக்கு, முசுகுந்த அர்ச்சனை, 10:00 மணிக்கு, திருவாதிரை மகா அபிஷேகம், வரும் 5ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, பாத தரிசனம், காலை, 7:00 மணிக்கு, நடராஜர் தரிசனம் ஆகியவை நடக்கின்றன. சிறப்பு அபிஷேகத்தில், நேற்று காலை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.