அவிநாசி: அவிநாசி, முருகம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா, வரும் 6ல் துவங்குகிறது. அன்றிரவு 9:00 மணிக்கு பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, ஊர் சுற்றி சோர் எறிதல், கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து அம்மன் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து மெரமனை எடுத்தல் நடக்கிறது; இரவு 10:30 மணிக்கு கோவை பிரதர்ஸ் இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 8ம் தேதி காலை 4:00 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியுடன் துவங்கும் விழாவில், மாவிளக்கு, வான வேடிக்கை, மெரமனை எடுத்தல்; அன்று மாலை 6:30 மணிக்கு கும்பம் நதிக்கரைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 9ம் தேதி மதியம் 12:30 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன், பொங்கல் விழா நிறைவடைகிறது.