புதுச்சேரி: சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு, புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள, வேதபுரீஸ்வரர் கோவிலில், நந்திக்கு நேற்று மாலை அபிஷே கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மிஷன் வீதியில் உள்ள, காளத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது.