சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள ஸ்ரீபவளநிறவள்ளி அம்பாள், ஸ்ரீபூவேந்திய நாதர் கோயிலில் மார்கழி மாத தீர்த்தவாரி உற்சவ விழாவும், சேவா பாரதி சார்பில் 1008 விளக்கு பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அதன்பின், கோலப்போட்டி, அபிஷேகம், ஆன்மிகச்சொற்பொழிவு நடந்தது. செயல் அலுவலர் தெய்வச்சிலை ராமசாமி, ஊராட்சி தலைவர் ராஜாங்கத்தேவர், ஸ்ரீபூவேந்திய நாதர் சமரச சன்மார்க்க சங்க நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.