விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில்ஆருத்ரா தரிசனம் நடந்தது. விழுப்புரம் பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருவாதிகை நட்சத்திரம், பவுர்ணமிசேர்ந்து வந்ததை யொட்டி, நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.இதையொட்டி காலை 7:00 மணிக்குசிவகாமிஅம்பாள் சமேத நடராஜர் உற்சவர் சிலைக்கு சிறப்புஅபிஷேகம்,ஆராதனை நடந்தது.
தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மலர்களால்அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு தீபாரா தனை நடந்தது.மதியம் 1:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.