பதிவு செய்த நாள்
05
ஜன
2015
11:01
கன்னிவாடி : பவுர்ணமியை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், சோடஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள்நடந்து. நாகாபரண சாத்துதலுடன் நடந்த பூஜையில்,
சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
* கசவனம்பட்டி மவுன குரு சுவாமி கோயிலில், பால், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் தொடர் அன்னதானம் நடந்தது.
* வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில், பவுர்ணமியை முன்னிட்டு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமிநரசிம்ம பெருமாளுக்கு இளநீர், பன்னீர், சந்தனம், பால், தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.