சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறப்பு நேரம் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2015 12:01
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 14-ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அதையொட்டி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து தரிசனம் நடத்தி, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கோவில் நடை திறப்பு நேரம் காலை, மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கு திறக்கப்படுகிறது. அதுபோல் மதியம் 1 மணிக்கு பதில் 1.30 மணிக்கும், இரவு 10 மணிக்கு பதில் 11.30 மணிக்கும் அடைக்கப்படுகிறது. இதனிடையே 5 மணி நேரம் மட்டுமே கோவில் அடைக்கப்பட்டு இருக்கும்.