பதிவு செய்த நாள்
06
ஜன
2015
12:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி பிரதட்சணம் ஜன.,13ல் நடக்கிறது. இதை முன்னிட்டு அம்மன், சுவாமி சப்பரங்கள் அன்று அதிகாலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி வடக்கு நோக்கி யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளி வீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் சாலை வழியாக மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல்புதுத்தெரு, கீழமாரட்வீதி, காமராஜர் சாலை, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேரும் என கோயில் இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.