நடராஜரின் அருகில் இருக்கும் அம்பிகையை சிவகாமி அல்லது சிவகாமவல்லி என்பர். வல்லி என்றால், கொடி. கொடி வளைந்து வளைந்து படர்ந்திருக்கும் தன்மையுடையது. நடராஜர் அருகிலுள்ள சிவகாமி அம்மையின் சிலையின் இடுப்பையும் வளைத்து செதுக்கியிருப்பர். அந்த அம்பாள் சிவனுடன் இணைந்து தன் அருளை கொடி போல படர விடுவாள். அதனால், சிவகாமவல்லி என்று பெயர் பெற்றாள்.