Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அபிராமி அந்தாதியை படிப்போருக்கு ... தலைசிறந்த பொக்கிஷம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீதியின் பாதையில் நடப்போம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2015
02:01

இரவு நேரத்தில் நான்கு திருடர்கள் வந்து கொண்டிருந்தனர். இருட்டாக இருந்ததால்,வழியில் துõங்கிக்கொண்டிருந்த ஒரு ஆளை மரக்கட்டை என நினைத்து ஒருவன் மிதித்து விட்டான். அலறி எழுந்த அவனிடம்திருடன், தவறுதலா மரக்கட்டைன்னு நினைச்சுட்டேன் என்றான். துõங்கியவனோ கோபத்தில்,யோவ்! எந்தமரக்கட்டையாவது பணப்பையோடு துõங்குமா? என்று கேட்டான்.இதைக் கேட்டதும்திருடர்கள் குஷியாகிவிட்டனர். எப்படியாவது அந்த பண முடிப்பைஅபகரிக்க முடிவெடுத்தனர். ஆனால், அவனோ அதற்கு இடம் கொடுக்கவில்லை. நான்கு பேரையும் எதிர்த்துப்போராடினான். இறுதியில் அந்த மனிதனை கட்டிப் போட்டு விட்டு, அவனிடம் இருந்த பணப்பையைப் பிடுங்கினர்.ஒரு திருடன் ஆர்வமுடன் பையைப் பிரித்து பார்த்தான். அதில் மிகவும் சொற்ப பணமே இருந்தது. திருடர்கள் எரிச்சலும், ஏமாற்றமும் அடைந்தார்கள். ஆக, அந்தப் போராட்டம் பயனற்றதாகிப் போனது. பூமியிலே போராட மனுஷனுக்கு காலம் குறிக்கப்பட்டிருக்கிறது(யோபு.7:1) என்றும்,நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப்பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள் (எபே.5:16) என்றும் பைபிள் நமக்கு கூறுகிறது. இந்த பொல்லாத காலத்தில் மனிதன் எதற்கெல்லாமோ போராடுகிறான். பதவிக்காகவும், பணத்துக்காகவும் பிரயாசைப்படுகிறான்.பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்க மாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள். நாமோ அழிவில்லாத கிரீடத்தை பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்(1கொரி.9:25) என்று அப்போஸ்தலனாகியபவுல் கூறுகிறார். நீங்கள் அழிவுள்ள கிரீடத்தை பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா அல்லது அழிவில்லாத கிரீடத்தைப் பெற்றுக் கொள்ள போராடுகிறீர்களா? நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மட்டுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு (எபே.6:11,12) என்கிறது பைபிள்.பவுல் தனது ஊழியத்தின் முடிவில் நல்ல போராட்டத்தைப்போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இது முதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டுஇருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருள்வார் எனக்கு மாத்திரமல்ல, அவர்  பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருள்வார். (11 தீமோ.4:7,8) என்கிறார்.உங்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை யோசித்து பாருங்கள். நீதியின் பாதையில் நடந்து வாழ்வை பயனுள்ளதாக்குங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar