மதுரை, திருநகர் விநாயகர் கோயில் தெருவில், இரு கன்னிமார்களின் கோயில் அமைந்துள்ளது. சுமார் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த கோயில் இதை ஆச்சி முத்தம்மன் கோயில் என்பார்கள். பல வருடங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தவம் செய்து சித்தி அடைந்ததால், அவரைக் குறிக்கும் வகையில், அச்சன் கோயில் என்றும் இந்தக் கோயிலை அழைக்கிறார்கள். பக்தர்கள். இங்கே உள்ள ஆறரை அடி உயர சூலாயுதம் சிறப்புக்குரியது. கோயிலின் கொடிமரம் மூலிகைகளால் ஆனது என்கின்றனர். கன்னிப் பெண்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களின் வேண்டுதலை மூன்று பவுர்ணமிக்குள் நிறைவேற்றித் தருவாள் ஆச்சி முத்தம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கை.