விழுப்புரம் : வைகாசி விசாகத்தை முன்னிட்டு விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் உள்ள பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்கார திரிசதி மகா யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாவஜனம், சத்ரு சம்கார திரிசதி ஹோமம், மூல மந்திர ஹோமம், மங்களமகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பகல் 12.30 மணிக்கு பாலமுருகனுக்கு ராஜஅலங்காரத்தில் தீபாராதனையும், மாலை 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் பாலசுப்ரமணியம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.