கிள்ளை : சிதம்பரம் அருகே உத்தமசோழமங்கலம் மகா மாரியம்மன் மற்றும் நவாப் பேட்டை கன்னிமுத்துமாரியம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா நடந்தது. சிதம்பரம் அருகே உத்தம சோழமங்கலம் மகா மாரியம்மன் கோவிலில் நடந்த 81வது ஆண்டு தீ மிதி உற்சவத்தை முன்னிட்டு கடந்த 3ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அன்று முதல் தினசரி உபயதாரர்களின் நிகழ்ச்சி நடந்து வந்தது. நேற்று (13ம் தேதி) நடந்த தீமிதி நிகழ்ச்சியில் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பலர் தீ மதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அம்பிகைநேயர் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். அதேப்போன்று நவாப்பேட்டை கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அப்பகுதி கிராமத்தினர் செய்திருந்தனர்.