பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திறப்பு, எண்ணப்பட்டது. அதில், 16.79 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தி இருந்தனர்.சென்னிமலை மலை மீது, முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீசுப்பிரமணியர் மற்றும் சுந்தரவள்ளி, அமுதவள்ளி என, தேவியருக்கு தனி கோவிலும் உள்ளது. கும்பாபிஷேகத்துக்குப்பின், வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இங்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, கோவில் வளாகத்தில், ஏழு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. உண்டியல் திறந்து, அதில் பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கையை எண்ணும் பணி நடந்தது.இதில், ரொக்கம், 16 லட்சத்து, 78 ஆயிரத்து, 751 ரூபாய் ரொக்கம், 104 கிராம் தங்கம், 675 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது. உண்டியல் திறப்பில், மருதமலை கோவில் ஆணையர் பழனிகுமார், ஈரோடு ஆய்வாளர் குழந்தாயாள், பெருந்துறை ஆய்வாளர் ஜெயமணி, சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில் செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம் மற்றும் ஸ்ரீராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர்.சென்னிமலை முருகன் கோவில் காணிக்கை, கும்பாபிஷேகத்துக்கு முன்பு, மாதம், மூன்று லட்சம் ரூபாயாக இருந்தது. தற்போது மாதம், ஒரு லட்சம் உயர்ந்து, மாதம், நான்கு லட்சம் வசூல் ஆகிறது. இதற்கு, வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரிப்பே காரணமாகும்.