கோபி:கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ஜேசீஸ் சங்கம் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.கோபி ஜி.கே., தவசியப்பன் சன்ஸ், ஹரிணி கட்டிட பொருட்கள் விற்பனை நிறுவனம் மற்றும் ஜேசீஸ் இயக்கம் சார்பில், பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி, ஜேசீஸ் தலைவர் ஷேக்கு அலாவுதீன் தலைமையில், திட்டத்தலைவர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். டாக்டர் முருகன், முன்னாள் ஜேசீஸ் தலைவர் சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.