பதிவு செய்த நாள்
10
ஜன
2015
04:01
சபரிமலை: சபரிமலையில் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக பூஜை செய்த தந்திரி கண்டரரு ராஜீவரருவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சபரிமலை தாந்திரிக உரிமை தாழமண் குடும்பத்திடம் உள்ளது. இந்த மடம் செங்கன்னுõர் அருகே அமைந்துள்ளது. சபரிமலையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் தாழமண் தந்திரிகளிடம் ஆலோசனை செய்த பிறகே இறுதி செய்யப்படுகிறது. தற்போது இந்த குடும்பத்தில் கண்டரரு மகேஷ்வரரு, கண்டரரு ராஜீவரரு என இரண்டு தந்திரிகள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் சபரிமலை பூஜைகளை கவனிக்கின்றனர். தந்திரி கண்டரரு ராஜீவரரு, கண்டரரு கிருஷ்ணரருவின் மகன். 1980ல் தந்தையுடன் சபரிமலையில் பூஜைகளுக்கு <உதவியாக வர தொடங்கினார். 1990ல் கிருஷ்ணரரு இறந்த பின்னர் ராஜீவரரு சபரிமலை தந்திரியாக பொறுப்பேற்றார். 25 ஆண்டுகள் பணிபுரிந்த அவருக்கு சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர் தலைமை வகித்தார். சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சதீஷ் வரவேற்றார். கேரள உளவுத்துறை டிஐஜி விஜயன், பி.ஆர்.ஓ. முரளி, ஆர்.ஏ.எப். கமாண்டர் விஜயன், சன்னிதானம் போலீஸ் தனிஅதிகாரி விமல், சன்னிதானம் மருத்துவ முகாம் அதிகாரி டாக்டர் சுரேஷ்பாபு, ஐயப்பா சேவா சங்க முகாம் அதிகாரி பாலன், ஐயப்பா சேவா சமாஜம் தலைவர் மூர்த்தி, ராஜப்பன்,மணீஷ், ஷியாம், பிரகலாதன் ஆகியோர் பேசினார்கள். பிரதீப்குமார் நன்றி கூறினார்.