பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து 10ம் நாள் உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ராப்பத்து 10ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு ÷ நற்றுமுன்தினம் காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சுவாமி உள்புறப்பாடும், அதனைத் தொடர்ந்து நம்மாழ்வார் திருவடி தேடல் நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.