பதிவு செய்த நாள்
12
ஜன
2015
11:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மங்கள சண்டிகா ேஹாமம் மற்றும் ஸ்ரீநிவாச கல்யாண மகோத்சவ விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காலை 7:30 மணிக்கு தம்பதிகள் பொது சங்கல்பம் செய்து கொள்ளுதல், காலை 10:30 மணிக்கு கலச ஸ்தாபனம், பூர்வாங்க பூஜைகள், தேவி மகாத்மிய பாராயணமும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை மங்கள சண்டிகா ேஹாமமும் நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 6:30 மணிக்கு வாசவி அம்மனுக்கு சண்டிகா ேஹாம கலச தீர்த்தாபிேஷகம், காலை 7:30 மணிக்கு கடைவீதி விநாயகர் கோவிலிலிருந்து பெருமாள் புறப்பாடு, சீர்தட்டு கொண்டு வருதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, காலை 8:30 மணிக்கு புண்யாக வாசனம், ரக்ஷாபந்தனம், ேஹாமம், காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை இன்னிசை நிகழ்ச்சியும், பகல் 11:00 மணி முதல் 12:00 மணி வரை திருமாங்கல்யா தாரணம், மாலை மாற்றுதல், வாரணமாயிரம் திவ்விய பிரபந்த பாசுரம், நலங்கு சீர், நிவேதன ஆராதனமும்; மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி., மகேந்திரன், பொள்ளாச்சி நகராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், உடுமலை நகராட்சி துணைத்தலைவர் கண்ணாயிரம், திரளான பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.