பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
திருப்பூர் : திருப்பூரில், "இசையமுதம் - 2015 இசை திருவிழா, வரும் 14ல் துவங்கி, 5 நாட்கள் நடைபெறுகிறது. திருப்பூர் சண்முகானந்த சங்கீத சபா சார்பில், ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு இசையமுது நிகழ்ச்சி நடத் தப்படுகிறது. பிரபல இசை கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், வளரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இது நடத்தப்பட்டு வருகிறது.சண்முகானந்த சங்கீத சபாவின் 12ம் ஆண்டு "இசை அமுதம் 2015 நிகழ்ச்சி, தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி மண்டபத்தில், வரும் 14ல் துவங்கி, 18 வரை நடைபெறுகிறது. இதில், தினமும் மாலை 5:00 மணிக்கு, வளரும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், திருப்பூரை சேர்ந்த இசை கலைஞர்களின் நிகழ்ச்சியும், 6:30 மணிக்கு முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ஊத்துக்குளி அருள்மணி குழுவினரின் நாதஸ்வர இசையோடு துவங்கும் நிகழ்ச்சி யில், 6:30 மணிக்கு விஜய் சிவாவின் வாய்ப்பாட்டு நடக்கிறது; ஸ்ரீராம்குமார் வயலின், மனோஜ்சிவா மருதங்கம், சந்திரசேகர சர்மா கடம் இசைக்கின்றனர்.
வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்கு, ஸ்ருதிலயா இசைப்பள்ளி மாணவர்களின் இன்னிசை; 6:30 மணிக்கு மதுரை கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு, கார்த்திக் ஸ்ரீனிவாசன் குழுவினரின் இன்னிசையும், அதை தொடர்ந்து, 6:30 மணிக்கு, கடம் கார்த்திக்கின், என்ஸம்பிள்-ப்யூஷன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 17ம் தேதி மாலை 5:00 மணிக்கு, விஜய சரஸ்வதி இசைப்பள்ளி மாணவர்களின் இன்னிசை; 6:30 மணிக்கு ரஞ்சினி காயத்ரி குழுவினரின் வாய்ப்பாட்டு நடைபெறும். நிறைவுநாளான 18ம் தேதி மாலை 5:00 மணிக்கு காயத்ரியின் நாட்டிய நிகழ்ச்சி; 6:30 மணிக்கு உமையாள்புரம் சிவராமன், ரோஜா கண்ணன், பிரியா முரளி குழு வினரின், "ஆன்மாவின் குரல் என்கிற இசை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை காண வரும் இசை பிரியர்களின் வசதிக்காக, கோவை பிரண்ட்ஸ் கேட்ரீங் சார்பில் உணவகம் செயல்படும். செவிக்கு இனிமை சேர்க் கும் இந்நிகழ்ச்சிக்கு, அனுமதி இலவசம். விவரங்களுக்கு 94430 35000, 98947 70920 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.