பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
திருப்பூர் : பழநி மலைக்கு , திருப்பூர் பக்தர்கள் பாதயாத்திரையை துவக்கியுள்ளனர். முருக பக்தர்கள், விரதம் இருந்து பழநி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை துவங்கும் நிலையில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்தவர்கள், விரதத்தை துவக்கியுள்ளனர். மாலை அணிந்து விரதமிருந்துவரும் பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கியுள்ளனர்.பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள், ஒருங்கிணைந்து, ஆறுமுக காவடி சுமந்தும், கைகளில் சக்தி வேல் ஏந்தியவாறு, காங்கயம் ரோடு, யூனியன் மில் ரோடு வழியாக, நேற்று இரவு பாதயாத்திரை சென்றனர்.