பதிவு செய்த நாள்
12
ஜன
2015
12:01
பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப்பில், யானைப்பொங்கல் விழா வரும் 16ம் தேதி நடக்கிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்தில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, டாப்ஸ்லிப் ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இதில், டாப்ஸ்லிப் வனச்சரகத்திற்குட்பட்ட கோழிகமுத்தி, சின்னார் மற்றும் வரகழியார் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் உள்ளன.இங்கு, வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து, மக்களிடையே விளக்கும் வகையில், ஆண்டுதோறும் டாப்ஸ்லிப்பில், யானை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், டாப்ஸ்லிப்பில், வரும் 16ம் தேதி யானைப்பொங்கல் விழா நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன, என்றனர்.