திண்டிவனம்: திண்டிவனம் மன்னார்சாமி கோவில் திடலில் இன்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு, நல்லியகோடன் நகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம் நடக்கிறது. 5 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. விழாக் குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.