வால்பாறை : வால்பாறை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட் ஸ்ரீராமர்கோவிலில், ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. வால்பாறை அடுத்துள்ளது சோலையார்எஸ்டேட் முதல் பிரிவு. இங்குள்ள ஸ்ரீராமர் திருக்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக காலை 5.00 மணிக்கு கணபதி பூஜையும், அதன் பின்னர் யாகபூஜையும் நடைபெற்றன. காலை 8.30 மணிக்கு ஸ்ரீராமர் கோவில், ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவை எஸ்டேட் பொதுமேலாளர் சதாசிவம் துவக்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் பொங்கல் விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.