புதுச்சேரி: புதுச்சேரி பாரதிபுரத்தில் உள்ள அய்யப்ப சுவாமி கோவிலில் மகர சங்கராந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை ராஜ அலங்காரத்துடன் அய்யப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், ஜோதி தரிசன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் இருமுடி ஏந்தி வந்து, அய்யப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் செய்தனர்.