சிவபெருமானுக்கு எதிராக தாருகாவன முனிவர்கள் ஏவிய புலியின் தோலை உரித்து போர்வையாகப் போர்த்தி, முயலகனை அடக்கி அவனது முதுகின் மீது நடனமாடிய தலம் திருவாரூர் மாவட்டம், திருத்தலையாலங்காட்டில் உள்ள நர்த்தனபுரீஸ்வரர் கோயில். இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் வெண்குஷ்டம் குணமாவதுடன், முன்னோர் சாபங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.