அனைத்து சிவத்தலங்களிலும் பெருமான் முன்பு நந்தி அமர்ந்திருக்கும். ஆனால், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மட்டும் தியாகேசப் பெருமானின் முன்பு நந்தி எழுந்து நின்று காட்சியளிக்கிறது. ஒரு சமயம் சுந்தரருக்காக தூது சென்ற பெருமான் அவசரத்தில், வீதிகளில் நடந்தே சென்றார். இதை அறிந்த நந்தி, இனி இதுபோன்ற தவறு நிகழக்கூடாது. பெருமான் புறப்படும் முன்பே நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எழுந்து நிற்பதாக ஐதீகம்.