திருமால் மீன் அவதாரம் கொண்டு லிங்க வழிபாடு செய்த தலங்களில் சிவபெருமான் மச்சேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். கும்பகோணம் அடுத்துள்ள தேவராயன் பேட்டை என்று அழைக்கப்படும் தலம் முன்னாளில் சேலூர் என்று அழைக்கப்பட்டது. (சேல் என்றால் மீன்). அங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை மீன் உருவில் திருமால் வழிபட்டதால், மச்சேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார்.