மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டும் தசரதனுக்கு ஆண் வாரிசு பிறக்கவில்லை ஒரு பெண் தான் பிறந்தாள். அவள் தான் சாந்தை. அவளை தசரதன் தன் சகோதரன் உரோமேசனுக்கு தத்து கொடுத்தான். அவன் அவளை வளர்த்து முனிவர் ரிஷ்ய சிருங்கருக்கு திருமணம் செய்து வைத்தான். தசரதனின் மருமகனான அந்த முனிவர் தான் தசரதனுக்கு புத்திரகாமேஷ்டி யாகம் செய்து கொடுத்தவர்.