Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமரும்... பரசுராமரும்... ராமனின் சகோதரி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராவணன் மகள் சீதை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
05:06

பத்மாட்சன் மகாலட்சுமி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என தவமிருந்தான். மகாலட்சுமி அவன்முன் தோன்றி, நான் விஷ்ணுவை என்றும் பிரியேன். நீ அவரிடம் அனுமதி கேட்டு உன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள் என்று கூறினாள். அவன் அப்படியே செய்து விஷ்ணுவிடம் ஒரு மாதுளம் கனியைப் பெற்றான். அதைப் பிளந்த போது அதிலிருந்து ஒரு அழகிய பெண் குழந்தையாக மகாலட்சுமி தோன்றினாள். அவளுக்கு பத்மை என பெயரிட்டு வளர்த்து, நீலநிறம் உள்ளவனுக்குதான் பெண் தருவேன் என்றான் அந்த அசுரன். உடனே அனைவரும் அவனிடம் போரிட்டு அவனைக் கொன்றனர். தந்தை இறந்ததும் யார் கையிலும் சிக்காமல் பத்மை தீக்குளித்தாள். ஆனால் தீயினுள் புதிய பூப்போல இருந்தாள். சிலநாள் சென்றதும் வெளியில் வந்து அமர்ந்தாள். அவ்வழியே சென்ற இராவணன் அவளைக் கண்டு மோகித்து அவளை அடைய முயன்றான். உடனே பத்மை, என்னால்தான் நீ அழிவாய் எனக் கூறிவிட்டு தீயில் பாய்ந்தாள். இராவணன் தீயை அணைத்துவிட்டு உள்ளே தேட ஒரு ரத்தினம் கிடைத்தது. அதை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று மண்டோதரியிடம் கொடுத்தான். அவள் அந்த பெட்டியை திறந்து பர்த்த போது அழகிய பெண் குழந்தை இருந்தது. அதைத் தன் குழந்தைபோல் எண்ணி கொஞ்சினாள். இராவணன் அந்தக் குழந்தையைத் தூக்க முயலும் போது, இராவணா! இந்தப் பெண் குழந்தையால் தான் உனக்கும், இலங்கைக்கும் அழிவு நேரும் என அசரீரி சொன்னது. உடனே அதைக் கொல்ல முயல, மண்டோதரி தடுத்து, இது நம் குழந்தை. இதைக் கொல்ல வேண்டாம் பெட்டியிலிட்டு கண்காணாமல் வெகுதொலைவில் சென்று பூமியில் புதைத்து விடுங்கள் என்றாள். அப்படியே இராவணன் காவலர்களிடம் ஆணையிட்டான். அக்குழந்தையை இமயமலை அடிவாரத்தில் புதைத்து விட்டனர்.

ஜனகர் மிதிலையில் ஏர் உழும்போது பெட்டியில் கிடைத்தது இந்தப் பெண் குழந்தை தான். அதற்கு சீதை எனப் பெயரிட்டு வளர்த்து இராமனுக்குத் திருமணம் செய்வித்தனர். அந்த சீதையைத் தான் வனவாசத்தின் போது இராவணன் தன் நாட்டுக்கே திரும்ப கொண்டு சென்று அதனாலேயே அழிந்தான்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar