Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் ... ரேணுகாபரமேஸ்வரி அம்மன் வீதியுலா உற்சவம்! ரேணுகாபரமேஸ்வரி அம்மன் வீதியுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டியில் பழங்குடியினர் கலாசார விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
10:01

ஊட்டி: ஊட்டியில் நடந்த பழங்குடியின கலாசார விழாவை சுற்றுலா பயணிகள் கண்டு வியந்தனர். பிரசார் பாரதி மற்றும் தஞ்சை தென் மண்டல கலாசார மையம் சார்பில், ஊட்டி பகல்கோடுமந்து பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று நடந்தது. கோவை பொதிகை தொலைக்காட்சி நிலைய தலைவர் ஆண்டாள் பிரியதர்ஷினி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் சங்கர் முன்னிலை வகித்தார். நீலகிரியில் வசிக்கும் தோடர், கோத்தர், இருளர், ஆலு குரும்பர், முள்ளு குரும்பர், பெட்ட குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் போன்ற பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர். ஒடிசாவில் உள்ள முண்டா பழங்குடியின மக்கள், சம்பூர் நடனத்தை ஆடி, அசத்தினர். தவிர, குஜராத்தி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து, இசைக் கருவிகளுடன், நடனமாடினர். தவிர, நீலகிரியில் வாழும் திபெத்தியர், தங்கள் நாட்டின் பாடலை பாடினர். கோவை சக்தி நிமிர்வு கலையக குழுவினர், பறையடித்து, உற்சாக நடனமாடினர். இந்திய மானுடவியல் ஆய்வு கழக துணை இயக்குனர் சத்யநாராயணன், ஊட்டி அகில இந்திய வானெலி நிலைய தலைவர் மாதவி, கூடலுார் உதவி வன பாதுகாவலர் சமந்தா உட்பட பலர் பங்கேற்றனர். ஷூட்டிங் மட்டம் பள்ளத்தாக்கு காட்சிமுனையில் நடந்த இந்த கலை நிகழ்ச்சிகளை, சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இன்றும், இந் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar