பதிவு செய்த நாள்
28
ஜன
2015
11:01
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா துவங்கியது. காலை 7.30 மணிக்கு வள்ளி, தெய் வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, காப்பு கட்டி, கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது. திருமுருகன் குருசாமி பூ ஜைகளை செய்தார். இன்று முதல் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்ய உள்ளனர். 2ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி ஊர்வலம், 3ம் தேதி தைப்பூசத்தன்று காலை 5.30 மணிக்கு சுப்பிரமணியருக்கு ஞானவேள்வி, காலை 6 மணிக்கு சக்திவேல் அபிஷேகம், 8 மணிக்கு மகா அபிஷேகம், 9.30 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம் நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு குருசாமிக்கு மிளகாய் பொடி அபிஷேகம், 1.30 மணிக்கு தீ மிதித்தல், செடல் சுற்றல், வேல் குத்துதல், லாரி இழுத்தல், தேர் இழுத்தல், காவடி ஊர்வலமும், 2.30 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடக்க உள்ளது. 4ம் தேதி இடும்பன் பூஜையும், காப்பு களைதலும், அன்னதானமும் நடக்க உள்ளது.