பொள்ளாச்சி : பொள்ளாச்சி முள்ளுப்பாடி ஐஸ்வர்யா பிரத்தியங்கிரா தேவி சித்தர் பீடம் குருபீடத்தில், மங்கள சண்டி யாகம் கோ பூஜை, ஐஸ்வர்யா பிரத்யங்கிரா வேள்வி, ஸ்ரீ வித்யா பூஜை, சுயம்பரா பார்வதி பூஜை இன்று துவங்கி பிப்.,1 வரை நடக்கிறது. விழாவையொட்டி, இன்று அதிகாலை கோ பூஜை, கலச, ஆபரணை லலிதா சகஸ்ரநாமம், குரு சொற்பொழிவு நிகழ்ச்சியும்; நாளை குழந்தைகளுக்கு கல்வி ஆயுள் ஆரோக்கியத்திற்கு வித்யா பூஜை, சண்டியாகம் துவக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.பிப்.,1 மதியம், 12:00 மணி முதல், 1:30 மணி வரை சண்டியாகம், குருமார்களின் தரிசனம், பூர்ணாகுதியும்; அன்னதான நிகழ்ச்சியும்; மாலை, 4:30 மணிக்கு சிறப்பு ராகு கால பூஜையும் நிகழ்ச்சியும் நடக்கிறது.