மதுரை : அழகர்கோவில் அருகில் அகோபில மடத்தின் ஜீயர் தங்குவதற்காக கட்டப்படும் ஆஸ்ரம பூமி பூஜை பிப்.,௧ல்நடக்கிறது. அகோபில மடம் 46 வது பட்டம் அழகிய சிங்கர் வண்சடகோப யதீந்திரமகாதேசிகன் விஜய யாத்திரையின் போது தங்குவதற்காக அழகர்கோவில் சுந்தர்ராஜ பெருமாள் கோயில்அருகில் ஆஸ்ரமம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை பிப். 1 காலை 6.30க்கு நடக்கிறது.துவரிமான் அகோபில மடத்தின் காரியதரிசி எஸ்.வெங்கட்ராமன் இந்தத் தகவலைத்தெரிவித்தார்.